150 குடும்­பங்கள் எஹலி­ய­கொ­டையில் இடம் பெயர்வு...!

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் தொடர்ச்­சி­யாக பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு அபாயம் ஏற்­பட்­டுள்ள நிலையில் எஹலி­ய­கொ­டையில் மண்­ச­ரிவு அபா­ய­முள்ள பிர­தே­சங்கள் என கட்­டட ஆய்வு மையம் எச்­ச­ரிக்கை விடுத்த பகு­தி­களில் இருந்து சுமார் 150 குடும்­பங்கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு இடம்பெயர்ந்­துள்­ள­தாக எகஹலி­ய­கொடை பிர­தேச செய­லகம் தெரி­வித்­துள்­ளது. 

மேற்­படி 150 குடும்பங்களைச் சேர்ந்த 577 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளதுடன், இவர்கள் பாது­காப்பு முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். மாதிங்­கொட - 40 பேர், அஸ்­கங்­குல - 28 பேர், எஹலி­ய­கொட தோட்டம் - 48 பேர், விலே கொட - 54 பேர், தொர­ண­கொட - 50 பேர், பெல்­பிட்­டிய – - 146 பேர், போபெத்த - 128 பேர், கல­ரு­வாவ- 18 பேர், எருபொல–- 65 பேர் என தங்கியுள்ளனர்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு எஹலியகொட பிரதேச செயலகத்தின் மூலமும் நலன்புரி அமைப்புக்களூடாகவும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ உதவி அதிகாரி ஜீ.பி.எஸ். அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post