தாயின் இரண்டாவது காணவரால் 15 வயது சிறுமிக்கு நிகழ்ந்த துயரம்...!

பொலன்னறுவை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி கருத்தறிக்க வைத்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 52 வயதுடைய குறித்த பெண்ணின் தாயின் இரண்டாவது கணவன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் பொலன்னறுவை போகஹபார பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். பாடசாலை மாணவி உடல் நிலை பாதிக்கப்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார்.

குறித்த மாணவியை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளதாக கூறியுள்ளனர். எனினும் இது குறித்து தனது தாயிடம் குறித்த மாணவி தெரியப்படுத்தியிருக்கவில்லை.

கைது செய்யப்பட்ட நபர் எதிர் வரும் 20 ஆம் திகதி வரை விலக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post