தமிழினியின் நூலைப்படித்தால் அறிந்துகொள்ளலாமாம் ராஜித சேனாரத்ன...!

தமிழ் கைதிகள் அனைவரும் விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும், அதுவே அரசாங்கத்தினது நிலைப்பாடு என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், ”கைதிகளின் விடுதலைக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் தாமதமே காரணம்.

ஆனால் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டிய கைதிகள் தவிர்ந்த ஏனையோரை உடனடியாக விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் அரசியற் கைதிகள் 15 வருட காலத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காரணமின்றி அடைக்கப்பட்டுள்ள இவர்களின் அரைவாசி வாழ்க்கையும் வீணடிக்கப்பட்டுவிட்டது.

மேலும் அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள்போராளிகள் எந்தவித குற்றச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டதாக தகவல் இல்லை.

அத்துடன் விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அணித் தலைவி தமிழினி எழுதிய நூலை படித்தால் பலவற்றை நாம் புரிந்துகொள்ள முடியும்.” என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post