அவசர சிகிச்சைப் பிரிவில் மாவை சேனாதிராசா அனுமதி – நோய்த் தொற்றினால் பாதிப்பு...!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று நாடாளுமன்ற அமர்வு முடிந்த பின்னர்,  எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றில், மாவை சேனாதிராசா கலந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவ மனையில் அவசிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மாவை சேனாதிராசாவின் காலில் இருந்த காயம் ஒன்றில் ஏற்பட்ட நோய்த் தொற்றே அவர் திடீரென மயக்கமடைந்தமைக்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்தும் அவருக்கு அவசர சிகிச்சைப்பிரிவில் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறின.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post