இலங்கையின் கல்வி செயற்பாடுகளுக்கு நடிகர் சூர்யாவின் 'அகரம்' உதவி...!

இந்­தியா உட்­பட உல­க­ளா­விய ரீதியில் கல்வி சார்­பாக இயங்கி வரும் நடிகர் சூர்­யாவின் தொண்டு நிறு­வ­ன­மான அகரம் பவுண்­டே­ஷனின் வரு­டாந்த ஒன்று கூடல்  தமிழ் நாட்டில் நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் கல்வி இரா­ஜாங்­க­அமைச்சர் வே.இரா­தா­கி­ருஷ்­ணனும்  கலந்து கொண்டார்.

இதன் போது அவர் நடி­கர்­க­ளான சிவ­குமார், சூர்யா மற்றும் பலரைச் சந்­தித்தார். இந்த அமைப்பு   இலங்­கையில் கல்வி இரா­ஜாங்க அமைச்­ச­ருடன் இணைந்து செயற்­ப­டு­வது தொடர்­பாக ஆரா­யப்­பட்­டது. 


 
இதன் பய­னாக எதிர்­வரும் காலங்­களில் அகரம் பவுண்­டே­ஷனின் கல்வி சார்­பான செயற்­பா­டுகள் இலங்­கையில் முன்­னெ­டுக்கப் பட­வுள்­ளன. இது தொட­பாக ஆராய்­வ­தற்கு இந்­தி­யா­வி­லி­ருந்து குழு ஒன்றும் இலங்­கைக்கு வர­வுள்­ளது. 

அகரம் பவுண்­டேஷன்  2006 இல் ஆரம்­பிக்­கப்­பட்ட ஒரு அரசு சார்­பற்ற தொண்டு அமைப்­பாகும்.
 
தர­மான கல்­வியை சமு­தா­யத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப் பதை நோக்கமாக் கொண்டு இது செயற்படுகிறது.  
 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post