களனி கங்கையில் மனைவியை தள்ளி விட்டு... கணவன் பாய்ந்து தற்கொலை...!

நப­ரொ­ருவர் தனது மனை­வியை களனி கங்­கை­யினுள் தள்ளிக் கொலை செய்­த­துடன் தானும் கங்­கையில் பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­தாக கிரேண்ட்பாஸ் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.
 
கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 10 மணி­ய­ளவில் ஆண் ஒரு­வரும் பெண் ஒரு­வரம் களனி கங்­கைக்கு அருகில் நட­மாடிக் கொண்­டி­ருந்­த­தா­கவும் பின்னர் குறித்த நபர் அப்­ பெண்ணை தள்­ளி­விட்டு அவரும் பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­ட­தாகவும் இச்­ சம்­ப­வத்­தினை நேரில் அவ­தா­னித்த நப­ரொ­ருவர் பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூலம் அளித்­துள்ளார்.  
 
மாத்­த­ளை­யி­லி­ருந்து வந்து கொழும்பில் குடி­யே­றி­யி­ருந்த 29 மற்றும் 25 வய­தான இளம் தம்­ப­தி­யி­னரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. இவர்கள் கிரேண்ட்பாஸ் - சேத­வத்த பிர­தே­சத்தில் வசித்து வந்­து­ள்ளனர்.
 
இத் ­தம்­ப­தி­யி­ன­ரி­டையே அடிக்­கடி சச்­ச­ர­வுகள் ஏற்­ப­டு­வ­தா­கவும், குறித்த கணவன் தனது முத­லா­வது திரு­மணத் தொடர்பை துண்­டித்­து­விட்டு இப்­ பெண்ணை திரு­மணம் செய்து கொண்­டுள்ளநிலையில் இவர்­க­ளுக்கு ஒரு வயது குழந்­தை­யொன்று காணப்­ப­டு­வ­தா­கவும் விசா­ர­ணை­க­ளின்­போது அய­ல­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.
 


அத்­துடன் இந் ­நபர் கூலித் தொழில் புரிந்­து­வந்­தி­ருந்த நிலையில் அவ­ரது மனைவி வீட்­டி­லி­ருந்து குழந்­தையை கவ­னித்­துக்­கொண்­டி­ருந்­துள்ளார்.
 
அடிக்­கடி ஏற்­பட்­டு­வரும் சச்­ச­ர­வு­களின் காண­மாக இத் ­தம்­ப­தி­யினர் பல தட­வைகள் பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று தற்­கா­லி­க­மாக இப்­பி­ரச்­சி­னை­களுக்கு தீர்வு கண்­டி­ருந்­த­போ­திலும் அதன்­பின்­னரும் இவர்­க­ளுக்­கி­டையில் முறு­கல்கள் இருந்­து­வந்­த­தாக அய­ல­வர்கள் மேலும் தெரிவித்துள்­ளனர். 
 
சம்­பவ தினத்­தன்று வழ­மை­போ­லவே இரு­வ­ருக்­கு­மி­டையில் வாக்­கு­வாதம் இடம்­பெற்­றுள்ள நிலையில், அதன் பின்னர் குறித்த நபர் தனது மனை­வியை ஆத்­தி­ரத்­துடன் களனி கங்கை நோக்கி அழைத்­து­சென்று ஆற்றில் தள்­ளி­விட்டு சிறிது நேரம் கழித்து அவரும் களனி கங்­கையில் பாய்ந்து தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளன. 
 
இச் ­சம்­பவம் இடம்­பெற்ற வேளையில், உயி­ரி­ழந்த தம்­ப­தி­யி­னரின் ஒரு­வ­யது குழந்தை அவர்­க­ளது வீட்­டின் ­அறை ஒன்றில் கட்­டி­லின்­மீது இருந்­துள்­ளது.  
 
இச்­ சம்­பவம் தொடர்பில் நீதி­மன்­றத்­துக்கு அறி­வித்­து­விட்டு குழந்­தையை சிறுவர் காப்­ப­கத்தில் ஒப்­ப­டைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக கிரேண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post