மட்டகளப்பில் அதிர்ச்சி - டீவி பார்ப்பதில் அண்ணன் தங்கை சண்டையில் நடந்த விபரீதம்...!

தொலைக்காட்சி பார்ப்பதில் அண்ணன் தங்கை இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் மட்டக்களப்பு வந்தூறுமூலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

விஸ்வலிங்கம், சுலோசனா தம்பதிகளுக்கு குணாலன் (18) என்ற. மகனும், கர்ஷிகா என்ற  (13) மகளும் பிள்ளைகளாவர்.

தந்தை விஸ்வலிங்கம் தொழில் நுட்ப உதவியாளராகவும், தாய் சுலோசனா   ஆசிரியையாகவும் தொழில் புரிகின்றனர்.

வழமையாக அண்ணனும், தங்கையும் தொலைக்காட்சி  பார்க்கும்போது ஆளுக்கொரு செனல் பார்க்க வேண்டுமென்பதில் சண்டை பிடித்து கொள்வதுண்டு.இந்நிலையில் சம்பவ தினமான நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் அண்ணன், தங்கையான குணாலன், கரிஷீகா ஆகியோர் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் போது தனக்கு விருப்பமான  "செனல் "மாற்றுவதில் சண்டை நடந்ததால் , அப்பா விஸ்வலிங்கம் வந்து, இருவரையும் படிக்கச் சொல்லி கூறிவிட்டு, தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து அண்ணனும் தங்தையும்  எழுந்து வெவ்வேறு அறைகளுக்குள் சென்றுவிட்டனர்.

இரவு 08.45 மணியளவில் சாப்பிடுவதற்காக அழைத்த போது, மகன் வராததால், தந்தை அவரது அறையை திறந்த போது, சுருக்கிட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டதும் உடனடியாக சுருக்கை அவிழ்த்து செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மரணித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post