ஸ்நாப்சாட் செயலியை இடையூறு செய்யும் ஐ.ஒ.எஸ். 11...!

ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய ஐ.ஒ.எஸ். 11 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டு, முதல் நாளே பீட்டா பதிப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

பல்வேறு புதிய வசதிகளை கொண்டுள்ள ஐ.ஒ.எஸ். 11 அனைவருக்கும் வெளியிடப்படும் முன்னரே பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. 

ஐ.ஒ.எஸ். 11 இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள ஸ்கிரீன் ரெக்கார்டிங் வசதி ஸ்நாப்சாட் பயன்படுத்துவோருக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்நாப்சாட் செயலியில் வாடிக்கையாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்த்ததும், அவை தானாக அழிந்து விடும்.

ஐ.ஒ.எஸ் 11 இயங்குதளத்தின் ஸ்கிரீன் ரெக்கார்டிங் வசதி ஸ்நாப்சாட் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் ஸ்நாப்சாட் புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்கிறது.   

ஐ.ஒ.எஸ். 11 பீட்டா பதிப்பில் ஸ்நாப்சாட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இப்பிரச்சனை குறித்து வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஸ்நாப்சாட்டில் மிக முக்கிய அம்சத்தை, ஐ.ஒ.எஸ். 11 மிக எளிதாக முடக்குவது குறித்து இரு நிறுவனங்கள் சார்பில் எவ்வித விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லை. 

எனினும் தற்சமயம் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ள ஐ.ஒ.எஸ். 11 எவ்வித செயலியின் உதிவியில்லாமலேயே ஐபோன் ஸ்கிரீனில் வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்துவிடுகிறது.

புதிய ஐ.ஒ.எஸ். 11 பொது வெளியீட்டிற்கு முன் இந்த பிரச்சனைக்கு ஸ்நாப்சாட் தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post