செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியாது... வெளி வந்த அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மட்டுமன்றி ஐரோப்பியாவின் நாடுகளின் ஈசா மற்றும் இந்தியாவின் ஈஸ்ரோ ஆகிய விண்வெளி ஆய்வு மையங்களும் செவ்வாய் கிரகம் தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன.

இவ் ஆய்வின் மிக முக்கிய கருப்பொருளாக மனிதனை செவ்வாய் கிரகத்தில் குடியமர்த்தும் சாத்தியம் அமைந்துள்ளது.

ஆய்வுகள் தொடர்ந்துவரும் நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

முன்னர் எண்ணியதை விடவும் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும்போது புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் இரு மடங்கு காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

மாதிரி அமைப்பு ஒன்றினை வைத்து மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


இதற்கு பிரதான காரணமாக அண்வெளியிலுள்ள கதிர் வீச்சுக்கள் நேரடியாக செவ்வாய் கிரகத்தினை சென்றடைகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள Nevada பல்கலைக்கழகத்திலுள்ள குழு ஒன்று விண்வெளி வீரர்கள் எதிர்நோக்கும் உடல் ஆரோக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு செய்தது.

இவ் ஆய்வின்போது மேற்கண்ட தகவல் அவர்களுக்கு கிடைத்துள்ளது.

இதேவேளை 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில் பூமியில் காணப்படும் கதிர்வீச்சுக்களை விட செவ்வாய் கிரகத்தில் 1,000 மடங்கு கதிர்வீச்சு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post