உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் எந்தவொரு ஆப் உதவியுமின்றி புகைப்படங்களை மறைப்பது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் மதிப்புமிக்க தகவல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருக்கலாம். நீங்கள் அதை பாதுகாப்பாக வைக்காவிட்டால் சில சமயங்களில் மற்றவர்கள் அதனை அணுகக்கூடும் அல்லது திருடப்படக்கூட செய்யலாம்.

அதனை தவிர்க்க உதவும் ஒரு வழிகாட்டி தொகுப்பே இது. இதில் எந்த விதமான ஆண்ட்ராய்டு ஆப் பயன்படும் இல்லாமல் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்கள் மறைப்பது எப்படி என்பது சார்ந்த எளிமையான வழிமுறைகள் விளக்கப்படங்களுடன் உங்களுக்கு வழங்குகிறோம்.''

இந்த தந்திரத்தை படித்து அறிந்த பிறகு, உங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஒரு ஆப் உதவி இல்லாமல் கூட உங்களின் தனிப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் உங்களால் பாதுகாக்க முடியும்.

உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் பைல் மேனேஜர் பயன்பாட்டைத் திறக்கவும்.


பைல் மேனேஜர் கோப்புக்குள் நுழைந்த பின்னர் அதில் 'பைண்ட் ல் ஹிட்டான பைல்ஸ்' என்ற ஆப்ஷனை காண்பீர்கள் (இந்த ஆப்ஷனை பெரும்பாலும் நீங்கள் செட்டிங்ஸ் செக்ஷனில் காணலாம்)

இப்போது, எந்த பெயருடனும் ஒரு புதிய கோப்புறையை உருவாக்கவும் மற்றும் கோப்புறையின் பெயரின் ஒரு முற்றுப்புள்ளியை வைக்கவும். உதாரணமாக: 'PrivatePictures'

இப்போது முன்பு நீங்கள் உருவாக்கிய கோப்புறைக்குள் உங்கள் தனிப்பட்ட படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை நகர்த்தவும்.

அவ்வளவுதான். இப்பொழுது உங்கள் தனிப்பட்ட கோப்புகள் உங்கள் கேலரியில் இருந்து மறைக்கப்படும்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post