பேஸ்புக்கில் அறிமுகப்படுத்திய புது வசதி பற்றி தெரியுமா..?

ஜிஃப் - கிராஃபிக் இன்டர்சேஞ்ச் ஃபார்மேட் (Graphic Interchange Format, GIF) ஜூன் 15, 1987 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மென்பொறியாளரான ஸ்டீவ் வில்வைட் என்பவர் கண்டறிந்த ஜிஃப்களின் 31-வது பிறந்த தினத்தை பேஸ்புக் கொண்டாடுகிறது. 

அந்த வகையில் பேஸ்புக் கமெண்ட்களில் ஜிஃப்களை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜிஃப் வசதி பேஸ்புக்கின் மெசன்ஜர் செயலியில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. மெசன்ஜர் செயலியை போன்றே பேஸ்புக் தளத்திலும் கமெண்ட் ஐகானை கிளிக் செய்தால் போட்டோ, வீடியோ, எமோஜி, ஸ்டிக்கர் ஐகான்களிடையே ஜிஃப் ஐகானும் சேர்க்கப்பட்டுள்ளது. 


பேஸ்புக் கமெண்ட்களில் உள்ள ஜிஃப் ஐகானை கிளிக் செய்து பேஸ்புக் ஏற்கனவே அதிகம் பயன்படுத்தப்படும் ஜிஃப்களை வரிசைப்படுத்தும். இதோடு புதிய ஜிஃப்களை தேடும் சர்ச் பாக்ஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அபேட்ட் செய்யப்பட்ட பேஸ்புக் டெஸ்க்டாப், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1300 கோடி ஜிஃப்கள் அதாவது நிமிடத்திற்கு 25,000 ஜிஃப்கள் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்டதாக தெரிவித்திருந்தது. 2016-இல் மட்டும் ஜிஃப் பயன்பாடு மும்மடங்கு அதிகரித்துள்ளது. 2017 முதல் நாளில் மட்டும் 40 கோடி ஜிஃப்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post