இத்தனை கோடி ஸ்மார்ட்போன்களா? விற்பனையில் அசத்தும் சீன நிறுவனம்!!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் 2017-இன் இரண்டாவது காலாண்டில் 23.16 மில்லியன் அதாவது 2.31 கோடி ஸ்மாரப்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த காலாண்டில் மட்டும் சியோமி நிறுவனம் 70 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லெய் ஜுன் தெரிவித்துள்ளார். 

சர்வதேச வியாபாரத்தில் முதலீடு, புதுவகை விற்பனை, ஆய்வு மற்றும் தயாரிப்புகளில் புதுமை உள்ளிட்டவைகளை செய்து இத்தகைய விற்பனையை சியோமி அடைந்துள்ளது. 

இத்தகைய விற்பனையை தொடர்ந்து லெய் ஜுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2017 இரண்டாவது காலாண்டில் மட்டும் 2.31 கோடி ஸ்மார்ட்போன்களை விநியோகம் செய்துள்ளோம், இது முந்தைய காலாண்டை விட 70 சதவிகிதம் அதிகம் ஆகும். சியோமி வரலாற்றில் சாதனை மைல்கல்லாக இந்த விற்பனை வளர்ச்சி அமைந்துள்ளது. இத்தகைய விற்பனை வளர்ச்சி சியோமி வளர்ச்சியை பிரதிபலிக்கிறது." என குறிப்பிட்டுள்ளார். 


கடந்த சில ஆண்டுகளில் ஆய்வு மற்றும் தயாரிப்பு பணிகளில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சியோமி, தான் தயாரித்த சர்ஜ் எஸ்1 சிப்செட் அறிமுகம் செய்தது, சியோமி சமீபத்தில் வெளியிட்ட எம்.ஐ. 6 டூயல் கேமரா செட்டப் மற்றும் ஆப்டிக்கல் சூம் வசதி கொண்டிருந்தது, இதேபோல் எம்.ஐ. மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் 31 நாட்கள் ஸ்டான்ட்பை டைம் வழங்குகிறது.  

மேலும் ஆஃப்லைன் சந்தைகளில் சியோமி அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. தற்சமயம் சீனாவில் மட்டும் 123 எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களை சியோமி இயக்கி வருகிறது, இத்துடன் 14 புதிய ஸ்டோர்களை துவங்கவும் சியோமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த ஆண்டின் முதல் அரையாண்டு நிலவரப்படி சியோமி நிறுவனம் 328 சதவிகிதம் வளர்ச்சியை இந்தியாவில் பெற்றிருக்கிறது. இதனால் இந்தியாவின் இரண்டாவது பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக சியோமி உள்ளது. மேலும் 2018-ம் ஆண்டில் 10 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய சியோமி திட்டமிட்டுள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post