விண்டோஸ் போன் பற்றி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட மைக்ரோசாப்ட்!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8.1 இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கான அப்டேட் அதிகாரப்பூர்வமாக நிறுத்திக் கொள்வதாக அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் பிரபல இயங்குதளமான விண்டோஸ் போன் 8.1 பெரும்பாலான சாதனங்களில் இயங்கி வருகிறது. 

அதன்படி, சுமார் 80 சதவிகிதம் விண்டோஸ் போன்களில் விண்டோஸ் போன் 8.1 இயங்குதளம் கொண்டுள்ளது. இனி எவ்வித அப்டேட், செக்யூரிட்டி பேட்ச், பக் ஃபிக்ஸ் போன்றவை விண்டோஸ் போன் இயங்குதளத்திற்கு வழங்கப்பட மாட்டாது. இதனால் விண்டோஸ் போன் 8.1 அல்லது அதற்கும் பழைய இயங்குதளங்களை பயன்படுத்துவோர் தங்களது சொந்த விருப்பத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம்.  


முன்னதாக லுமியா 1520, லுமியா 930, லுமியா 830 மற்றும் லுமியா 735 மாடல்களில் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தை தொடர்ந்து விண்டோஸ் 10 மொபைல் அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் பெரும்பாலான சாதனங்களில் இந்த அப்டேட் வழங்கப்படவில்லை என்றும், பெரும்பாலானோர் அப்டேட் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. 

விண்டோஸ் போன் 8 அல்லது விண்டோஸ் போன் 7 இயங்குதளங்களுக்கான அப்டேட்கள் முறையே ஜனவரி 2016 மற்றும் அக்டோபர் 2014-ம் ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான விண்டோஸ் மொபைல் இயங்குதளங்களுக்கு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டது. இதேபோல் எவர்நோட் செயலியும் விண்டோஸ் இயங்குதளங்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post