பேஸ்புக் மெசன்ஜர் செயலியின் லைட் பதிப்பு இந்தியாவில் வெளியானது!!

பேஸ்புக் நிறுவனத்தின் மெசன்ஜர் செயலிக்கான லைட் பதிப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக 132 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட மெசன்ஜர் லைட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், மெசன்ஜர் லைட் ஒருவழியாக இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள மெசன்ஜர் லைட் 10 எம்.பி.க்கும் குறைவான மெமரி கொண்டுள்ளது. எனினும் பேஸ்புக் மெசன்ஜர் செயலியின் அம்சங்கள் அனைத்தையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் மெசன்ஜர் செயலியை கொண்டு மெசேஜ், போட்டோ, லின்க், எமோஜி மற்றும் ஸ்டிக்கர்களை அனுப்பவும், பெறவும் முடியும். இத்துடன் வாய்ஸ் கால் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.


பேஸ்புக் மெசன்ஜர் லைட் செயலி முதற்கட்டமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி டேட்டா வேகம் குறைவாக இருக்கும் பகுதிகளில் பயன்படுத்த பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளை போன்றே இந்தியாவிலும் பேஸ்புக் மெசன்ஜர் லைட் செயலி நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் இந்தியாவில் டேட்டா வேகம் குறைவாக இருக்கும் பகுதிகளில் மெசன்ஜர் லைட் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post