வாடிக்கையாளர்களை கவர வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்!!!

உலகின் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் அனைத்து வித ஃபைல்களையும் டிரான்ஸ்ஃபெர் செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்ட அம்சங்கள் தற்சமயம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. 

புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்ய வாடிக்கையாளர்கள் கூகுள் பிளே சென்று டவுன்லோடு செய்ய முடியும். அனைத்து வித ஃபைல்களையும் பகிர்ந்து கொள்ளும் வசதியை தொடர்ந்து சாட் செய்யும் போது டெக்ஸ்ட் ஃபார்மேட்டிங் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

சாட் பாக்ஸ்-இல் டைப் செய்யும் போது குறிப்பிட்ட எழுத்துக்களை தேர்வு செய்து எளிதாக போல்டு, ஸ்டிரைக்த்ரூ மற்றும் இட்டாலிசைஸ் போன்றவற்றை செய்ய முடியும். இந்த வசதியும் முன்னதாக பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் வாட்ஸ்அப் செயலியில் அனைத்து வகையான ஃபைல்களையும் பரிமாற்றம் செய்யும் வசதியை அந்நிறுவனம் ஆண்ட்ரய்டு, ஐபோன் மற்றும் விண்டோஸ் போன்களில் சோதனை செய்யப்பட்டது.


முன்னதாக வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு பயன்படுத்துவோருக்கு புதிய மீடியா பன்ட்லிங் வசதி வழங்கப்பட்டது. இனி வாட்ஸ்அப் பயனாளிகள் அதிகப்படியான புகைப்படங்களை நண்பர்களுக்கு ஒரே சமயத்தில் அனுப்ப முடியும். இவ்வாறு அனுப்பப்படும் புகைப்படங்கள் ஆல்பங்களாக அனுப்பப்படும். புதிய அப்டேட்டில் ஆல்பத்தை திறக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து புகைப்படங்களும் திரையில் தெரியும். 

இதே வசதி அனைத்து ஐபோன் வாடிக்கையாளர்களுக்கும் கடந்த மாதம் வழங்கப்பட்டது. இதேபோல் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டில் வாட்ஸ்அப் கால் ஸ்கிரீன் சிறிய மாறுதல்களை பெற்றுள்ளது. இதே போன்ற வசதியும் கடந்த மாதம் இணையத்தில் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post