கூகுள் நிறுவனத்திலிருந்து ஊழியர் பணிநீக்கம்... எதற்கு தெரியுமா..?

தேடு பொறியான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டில் பொறியாளராக பணிபுரிபவர் ஜேம்ஸ் டாமோர். இவர் கடந்த வாரம் நிறுவனத்தின் நடக்கும் பாலின பாகுபாடு குறித்து அறிக்கை ஒன்றை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் நிறுவனத்தில் ஆண்-பெண் பாகுபாடு அதிகம் பார்க்கப்படுகிறது.

பெண்களுக்கு தொழில்நுட்பத்துறை மற்றும் தலைமை பொறுப்பு போன்ற பதவிகளை கொடுக்க மறுக்கின்றனர் என காரசாரமாக எழுதியிருந்தார்.

ஜேம்ஸ் டாமோரின் இந்த மெமோ டெக் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஜேம்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அவரை வேலையை விட்டு நீக்கியது கூகுள். அவர் நிறுவனத்திடம் முறைப்படி இந்த பிரச்சனைக்கான தீர்வு காண தொடர்புகொண்டுள்ளார். அதற்கு கூகுள் நிறுவனம் ஊழியர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை பற்றி பேச முடியாது என கூறிவிட்டது.


இது குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறுகையில், ஜேம்ஸ் அனுப்பிய அறிக்கையில் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு எதிராக மற்றும் பாலின வேறுபாட்டை பற்றி வரம்பு மீறி எழுதியுள்ளார் அதனால் அவரை பதவி நீக்கம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்நிறுவனத்தின் துணை தலைவர் டெனிலே பரவுன் ,” ஜேம்ஸ் நிறுவனத்தில் ஆண்-பெண் பாகுபாடு காட்டுவதாக தவறாக நினைத்து கொண்டிருக்கிறார். இங்கு அது போன்று எந்த பாகுபாடும் காட்டுவதில்லை” என தெரிவித்துள்ளார். 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post