வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப் -இல் புதிய சேவை.... என்ன தெரியுமா..?

பேஸ்புக் கைப்பற்றிய வாட்ஸ்அப் செயலியில் இனி மெசேஜ் அனுப்புவதைப் போலப் பணத்தையும் இன்ஸ்டன்ட் முறையில் அனுப்பும் புதிய சேவையை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளது.

 இந்தியாவில் பேஸ்புக்-ஐ விட வாட்ஸ்அப் அனைத்துத் தரப்பு மக்களாலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு பேஸ்புக் தலைமையிலான வாட்ஸ்அப் இந்தியாவில் பேமென்ட் துறையில் இறங்க முடிவு செய்துள்ளது.

பீட்டா வெர்ஷன்..
இப்புதிய சேவைக்கான பணிகள் அனைத்தும் முடிந்து இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், இதனை முறையாகச் சோதனை செய்தபின்பு வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது வாட்ஸ்அப் நிர்வாகம்.

யூபிஐ செயலி
 மத்திய அரசு அறிமுகம் செய்த யூபிஐ பணப் பரிமாற்ற தளத்தில் கீழ் வாட்ஸ்அப் இந்தச் சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக WABetaInfo தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வங்கி - வங்கி பரிமாற்றம்..
பேடிஎம், அமேசான் பே போல் அல்லாமல் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தப்பட உள்ள சேவையில் மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கி பணம் நேரடியாக அனுப்ப உதவிடம். இதற்காகவே வாட்ஸ்அப், பிற நிறுவனங்களைப் போல் வேலெட் சேவையாக இல்லாமல் யுபிஐ தளத்தின் மூலம் இந்தப் புதிய பணப் பரிமாற்ற சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.  

வெர்ஷன்
வாட்ஸ்அப் தனது புதிய அப்டேட்டில் அதாவது '2.17.295' வெர்ஷனில் கூகிள் ப்ளே பிட்டா பிரோகிராம் வாயிலாக வாட்ஸ்அப் பேமெண்ட்: உடனடி வங்கி - வங்கி பரிமாற்ற சேவையை யுபிஐ தளத்தில் வாயிலாக அளிக்கிறது. எனத் தெகிவித்துள்ளது. ஆனால் வாட்ஸ்அப் தளத்தில் இது இன்னும் கட்டுமான பணிகளிலேயே உள்ளதாக வாட்ஸ்அப் தளம் கூறியுள்ளது.  

யுபிஐ தளம்
 ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா, இரு வங்கி கணக்குகளுக்கு மத்தியிலான உடனடி பணப் பரிமாற்ற சேவையான யுபிஐ தளத்தை அறிமுகம் செய்தது. இது மொபைல் தளத்தில் இயங்கக் கூடியது.

இந்தியா
வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு இந்தியாவில் மட்டும் சுமார் 200 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இப்புதிய சேவைக்காக வாட்ஸ்அப் ஏற்கனவே NPCI மற்றும் வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

பிற நிறுவனங்கள்
இந்தியாவில் இருக்கும் பிற மெசேஜ் சேவை அளிக்கும் நிறுவனங்களான வீசேட், ஹைக் மெசஞ்சர் ஆகியவை இத்தகைய சேவையை ஏற்கனவே அளித்து வருகிறது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post