கம்பியூட்டரில் டெம்பரரி பைல்களை நீக்குவது எப்படி..?

லாரிகளில் இருக்கும் பேட்டரி பெட்டிகளில் “தினமும் என்னைக் கவனி” என்று எழுதப்பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டரை மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருக்களை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். லாரி மட்டுமின்றி, ஆட்டோ மொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பராமரித்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அது ஓடாத மோட்டார் வாகனமாக மாறிவிடும். அதேபோல கணினியிலும் சில விஷயங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும்.

தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள்பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பதுதான். இதற்கு சி கிளனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.


இன்டர்நெட் இணைப்பு பெற்று இணைய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆன்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க்கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாம். இதற்கென ஓரிரு நிமிடங்கள் தான் ஆகும்.

கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை டிப்ராக் செய்வது மிக அவசியம். இதற்கான கால அவகாசம் நீங்கள் புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்வதனைப் பொறுத்துள்ளது. இருப்பினும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்வது நல்லது.

சி கிளனர் போல கிளன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். சிலர் வாரத்தில் 3 முறை இதனைப் பயன்படுத்துவார்கள். டெம்பரரி பைல்களை நீக்கும்போது ரீசைக்கிள்பின் மற்றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.

இன்னொரு வழியும் உள்ளது. ஸ்டார்ட் (start) மெனு சென்று அங்கு கிடைக்கும் ரன் பாக்ஸ் (Start>Run ) செல்லுங்கள். %temp% என டைப் செய்து ஓகே கிளிக் செய்திடுங்கள். உடனே தற்காலிக பைல்கள் உள்ள போல்டர்கள் அனைத்தும் கிடைக்கும். வேறு எந்த தயக்கமும் இன்றி அனைத்தையும் டெலிட் செய்திடுங்கள். ஒரு சில பைல்கள் அல்லது போல்டர்கள் அழிக்கப்படவில்லை என்று செய்திகள் வரலாம். எவ்வளவு அழிக்க முடியுமோ அவ்வளவையும் அழித்துவிடுவது நல்லது. 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post