சியோமி நிறுவனம் வெளியிட இருக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்!!!

சியோமி Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 11-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பதை சியோமி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ள நிலையில், Mi நோட் 3 எனும் புதிய ஸ்மார்ட்போனும் இதே விழாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு சியோமி வெளியிட்ட Mi நோட் 2 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வெளியாக இருக்கும் Mi நோட் 3 மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன்களின் புதிய டீசரை சியோமி வெளியிட்டுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு தெரியவந்துள்ளது.

Mi நோட் 3 ஸ்மார்ட்போனின் விளம்பர தூதர் மற்றும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி என இருவரும் டீசர் வீடியோவில் ஸ்மார்ட்போனினை கையில் வைத்திருக்கின்றனர். இதில் புதிய ஸ்மார்ட்போன்களில் முக அங்கீகாரம் (face recognition) செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.


புகைப்படங்களில் பின்புறம் கைரேகை ஸ்கேனர் இல்லாமல் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பாளரும் டீசர் வீடியோவில் போனினை கையில் வைத்திருக்கின்றனர். இரண்டு ஸ்மார்ட்போன்களும் டூயல் கேமரா அமைப்பு மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி Mi நோட் 3 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜிபி ரேம், 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமராவும் 64 மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post