ஜியோ போனை ஒழித்துக்கட்ட களமிறங்கும் ஏர்டெல் போன்!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிரடியாக அறிவித்த இலவச ஜியோ போனுக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் மொபைல் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ சிம் கார்டு மூலம் இந்தியாவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை வளைத்துப்போட்டது. பின்னர், ஜியோ போன் என்ற பெயரில் இலவசமாக (திரும்பப் பெறத்தக்க வைப்புத்தொகை ரூ.1500) 4G மொபைல் அறிமுகம் செய்தது. இதற்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


இந்நிலையில், ஜியோவின் கொட்டத்தை அடக்க ஏர்டெல் உள்ளிட்ட போட்டி நிறுவனங்கள் படாத பாடு படுகின்றன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் 4G ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது. இதற்காக பிரபல மொபைல் உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

ரூ.2500 முதல் ரூ.2700 வரை விலையில் 4 இன்ச் தொடுதிரை, டூயல் கேமரா, 1GB RAM, 4G VoLTE வசதி, நீடித்து நிற்கும் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வழங்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.

தீபாவளியை ஒட்டி ஏர்டெல் தனது மொபைல் அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post