இந்திய இணையதள இரகசியங்களை திருடிய ஹேக்கர்கள்;இரகசியங்கள் வெளியாகும் அபாயம்!!!

இந்திய இணையதளங்கள் மீது ஹேக்கர்கள் (Hackers) தாக்குதல் நடத்தி உள்ளதால் கோடிக்கணக்கான தகவல்கள் விற்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை இணையதள முகவரிகளை வழங்க, ஐரின் (Indian Registry for Internet Names and Numbers) என்ற அமைப்பு செயல்படுகிறது. தற்போது இந்த இணைய சர்வர்கள் மீது ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். ஏற்கெனவே இத்தகைய ஹேக்கர்கள் தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக, மத்திய அரசுக்கு இணையப் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரித்திருந்த நிலையில் தற்போது இந்த செயல் நடைபெற்றுள்ளது.


மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் ஐரின்(IRINN) அமைப்பு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஹேக்கர்கள் தாக்குதல் குறித்து ஐரின் நிறுவனம் சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post