ஒரு மாதத்தில் சியோமி நிறுவனம் எவ்வளவு போனை விற்பனை செய்தது தெரியுமா..?

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

'ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் முறையாக 10 கோடிகளுக்கும் அதிகமான விற்பனையை செய்திருக்கிறோம். இது நாங்கள் எதிர்பார்த்ததை விட பலமடங்கு அதிகம் ஆகும்.' என சியோமி நிறுவன தலைமை செயல் அதிகாரியான லெய் ஜூன், தனது வெய்போ கணக்கில் தெரிவித்துள்ளார்.

சியோமி நிறுவனம் கடந்த வாரம் விற்பனை செய்ததில் பத்தில் ஒரு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இரண்டு நாட்களில் விற்பனையாகின. இதில் சியோமி ரெட்மி நோட் 4 அதிகம் விற்பனையானதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற சிறப்பு விற்பனையின் இரண்டு நாட்களில் மட்டும் பத்து லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக சியோமி தெரிவித்தது. 


இந்தியாவில் பிளிப்காட் மற்றும் அமேசான் தளங்களின் சிறப்பு தள்ளுபடி விற்பனை கடந்த மாதம் நடைபெற்றது. இதில் 48 மணி நேரத்தில் 13 லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது, குறிப்பிட்ட சில மாடல்களின் விநியோகம் மும்முரகமாக நடைபெற்று வருகிறது. அதிகப்படியான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மேலும் அதிகப்படியான ஸ்மார்ட்போன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் லெய் ஜூன் தெரிவித்துள்ளார்.

2015-ம் ஆண்டில் 70 மில்லியனாக இருந்த ஸ்மார்ட்போன் விநியோகம் கடந்த ஆண்டு 58 மில்லியனாக குறைந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு விநியோகத்தை அதிகப்படுத்த சியோமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post