யாகூவின் 300 கோடி டேட்டாக்கள் திருட்டு - ஆய்வில் அதிர்ச்சி!!!!

யாகூ நிறுவனத்தின் 300 கோடி டேட்டாக்களும் ஹேக்கர்களால் திருடப்பட்டு விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவை அனைத்தும் 2013 ம் ஆண்டிலேயே திருடப்பட்டு விட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்களின் அக்கவுன்ட் ஹேக் செய்யப்படுவதாக யாகூ வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் என பலரும் புகார் அளித்து வந்தனர்.

இது தொடர்பாக யாகூ தலைமைகத்திற்கு வரும் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததை தொடர்ந்து, அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

உலக வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில், அதுவும் ஒரே ஆண்டில் இவ்வளவு அதிகமான தகவல்கள் திருடப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை.


அதிக அளவில் டேட்டாக்கள் திருடப்பட்ட தகவல் வெளியானது யாகூ நிறுவனத்தின் சொத்துக்களின் விலைகளை குறைத்து பேசி வாங்க வெரிசோன் நிறுவனம் முன்வந்துள்ளது. 

இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக யாகூ தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக யாகூ நடத்திய புதிய ஆய்வில் அனைத்து வாடிக்கையாளர்களின் அக்கவுன்ட்களும் ஹேக் செய்யப்பட்டு, தகவல்கள் தெரிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

பாஸ்வேர்டுகள் மட்டுமின்றி டெக்ஸ்ட் தகவல்கள், பேமன்ட் கார்டு டேட்டா அல்லது வங்கி கணக்கு விபரம் உள்ளிட்ட தகவல்களும் திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post