விரைவில் பட்ஜெட் விலையில் வெளியாகும் ஹானர் 7X!!!

ஹூவாய் நிறுவனம் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனினை விரவைில் வெளியிட இருக்கும் நிலையில் ஹானர் பிரான்டு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய ஹானர் ஸ்மார்ட்போன் 18:9 டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஹானர் 7X என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் சீனாவின் சான்றளிக்கும் வலைத்தளமான Tenaa-வில்  வெளியாகியுள்ளது. முன்னதாக ஹானர் 9i ஸ்மார்ட்போன் 5.9 இன்ச் ஃபுல் வியூ+FHD டிஸ்ப்ளே, கிரின் 659 பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

ஹானர் 7X எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- 6.0 இன்ச் 2160x1080 பிக்சல், 18:9 ஸ்கிரீன்
- கிரின் பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 3240 எம்ஏஎச் பேட்டரி


புதிய ஹானர் 7X ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீன சந்தையில் வெளியிடப்பட்டு அதன்பின் மற்ற நாடுகளில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களின் படி ஹனர் 7X விலை 270 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.17,614 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஹானர் 9i ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. நான்கு கேமராக்கள் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையுடன் வெளியிடப்பட்ட ஹானர் 9i பிரெஸ்டிஜ் கோல்டு, அரோரா புளூ மற்றும் கிராஃபைட் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post