ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் பற்றி வெளி வந்த சுவாரஸ்ய தகவல்கள்!!!

ஏர்டெல் மற்றும் கார்பன் மொபைல் நிறுவனங்கள் இணைந்து கார்பன் A40 ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்தியாவில் வெளியிட இருக்கின்றன. 22 இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும் 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,399 என நிர்ணயம் செய்யப்படுகிறது.

இத்துடன் ரூ.169 விலையில் அன்லிமிட்டெட் காலிங் மற்றும் தினமும் 0.5 ஜிபி 4ஜி டேட்டா என 28 நாட்களுக்கு வழங்குகிறது. புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோர் தொடர்ச்சியாக 36 மாதங்களுக்கு ரூ.169க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது. 

முதலில் ஸ்மார்ட்போன் வாங்குவோர் ரூ.2,899 பணம் செலுத்தி தொடர்ச்சியாக 36 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது 18 மாதங்களுக்கு பின் ரூ.500 திரும்ப பெறுவதோடு 36 மாதங்களுக்கு பின் ரூ.1000 என மொத்தம் ரூ.1,500 வரை சலுகை பெற முடியும். 

இந்த திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய முடியாது என்பவர்கள் முதல் 18 மாதங்களில் ரூ.3000 வரை ரீசார்ஜ் செய்து முதல் தவணையான ரூ.500 திரும்ப பெற முடியும். இத்துடன் அடுத்த 18 மாதங்களில் ரூ.3000 வரை ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.1000 திரும்ப பெற முடியும்.


கார்பன் A40 சிறப்பம்சங்கள்:

- 4.0-இன்ச் 800x480 பிக்சல் WVGA டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 0.3 எம்பி (VGA) செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 1400 எம்ஏஎச் பேட்டரி

புதிய ஸ்மார்ட்போன் ஏர்டெல் நிறுவனத்தின் மேரே பேளா 4ஜி ஸ்மார்ட்போன் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் மேலும் பல்வேறு மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து அவற்றை பீச்சர்போன் விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 

ஏர்டெல் புதிய திட்டத்தின் கீழ் வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன்ள் நாட்டின் முன்னணி மொபைல் போன் விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post