நிஜத்தில் ஸ்மார்ட்போன்' ஊடாக முத்த பரிமாற்றம்...!

ஸ்மார்ட் கைப்­பே­சி­களின் ஊடாக, நிஜத்தில் முத்­த­மொன்று கொடுக்கும் போது உண்­டாகும் உணர்­வினை ஏற்­ப­டுத்தும் வகையில் முத்­தங்­களை பரி­மா­றக்­கூ­டிய புதிய கைத்­தொ­லை­பேசி துணை உப­க­ரணம் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இது முற்­றிலும் உண்­மை­யா­னதும் நம்­ப­மு­டி­யா­த­து­மான கண்­டு­பி­டிப்­பாகும். லண்­ட­னி­லுள்ள பல்­க­லைக்­க­ழ­க­மொன்றில் கல்வி கற்­று­வரும் எமா யென் சென் என்ற மாணவி ஒரு­வ­ரினால் இவ்­வ­கை­யான முத்தப் பரி­மாற்ற உப­க­ரணம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த உப­க­ர­ணத்­துக்கு ‘KISSENGER’ என அவர் பெய­ரிட்­டுள்ளார்.

தற்­போது இந்த கண்­டு­பி­டிப்பு பரீட்­சார்த்த மட்­டத்தில் காணப்­ப­டு­கின்ற போதிலும் மிகவும் விரை­வாக இதனை முழு­மைப்­ப­டுத்­த­வுள்­ள­தாக சென் தெரி­வித்­துள்ளார்.

கிஸெஞ்சர் எனப்­படும் இந்த உப­க­ர­ணத்தை ஸ்மார்ட் கைப்­பே­சி­களில் பொருத்­தி­யதன் பின்னர் அதன்­மூலம் முத்­த­மிட முடியும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

தற்­போதை கால­கட்­டத்தில் காத­லர்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் கைப்­பே­சி­களின் மூலம் முத்­தத்­தினை பரி­மாற்­றிக்­கொண்­டாலும் அது வெறும் ஒலி வடி­வத்­தி­லேயே காணப்­படும் எனவும் இந்த உப­க­ர­ணத்தில் காணப்­படும் உணரி அதா­வது சென்ஸர் மூலம் உணர்ச்­சி­க­ர­மா­ன­தான முத்­தப்­ப­ரி­மாற்­றத்­தினை மேற்­கொள்­ள­ மு­டி­யு­மெ­னவும் அதன்­போது நிஜத்தில் முத்­தத்தை பெறு­வ­தனை போன்று உண­ர ­மு­டி­யு­மெ­னவும் சென் தெரி­வித்­துள்ளார்.எனினும் இந்த உப­க­ர­ணத்தின் குறைப்­பா­டொன்­றாக கரு­தப்­ப­டு­வது, இது ஐபோன் கைப்­பே­சி­க­ளுடன் மாத்­தி­ரமே உப­யோ­கிக்க கூடி­ய­வா­றாக வடி­வ­மைக்கப் பட்டுள்ளமையாகும்.

எவ்வாறாயினும் எதிர்காலத்தில் ஏனைய ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களும் பயனடையும் விதத்தில் இதனை மாற்றியமைப் பதற்கான முயற்சிகளை மேற் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post