செல்ஃபி எடுப்பதில் அலாதி பிரியமா..? உங்களுக்காக வருகிறது கூல்பேட் மெகா3 ஸ்மார்ட்ஃபோன்...!

சீனாவைச் சேர்ந்த கூல்பேட் நிறுவனம், அதன் மெகா 3 என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்ஃபோன், ரூ.6,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5.5 இன்ச் ஹெச்டி தொடுதிரை வசதி, 4ஜி சேவைத்திறன், 2 ஜிபி ரேம், 16 ஜிபி உள்ளீட்டு நினைவுத்திறன் (தேவைக்கேற்ப நீட்டிக்கும் வசதி), 3,050 எம்ஏஹெச் பேட்டரி, 8 மெகாபிக்சல் திறன் உள்ள முன்புற மற்றும் பின்புற ஃப்ளாஷ் உடன் கூடிய கேமிராக்கள் ஆகிய சிறப்பம்சங்களை கூல்பேட் மெகா 3 கொண்டுள்ளது.செல்ஃபி ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் முன்புற கேமிராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக, கூல்பேட் கூறியுள்ளது.

அத்துடன், 3 4ஜி சிம் கார்டுகளைப் பொருத்தி இயக்க முடிவது இதன் மற்றொரு சிறப்பம்சம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post