கணவனின் தொண்டையை பாய்ந்து கடித்த சிங்கம்.. அதிரடியாக காப்பாற்றிய மனைவி - வீடியோ!!

பிரான்சில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது கணவரை சிங்கம் கடித்து குதறிய போது, அவரது மனைவி உடனடியாக ஸ்பிரே அடித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு பிரான்சின் Doullens பகுதியில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதே போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையும் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது சிங்கம் தொடர்பான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பயிற்சியாளர் Loberot-ம் உடன் இருந்தார்.

அப்போது திடீரென்று அந்த சிங்கம் பயிற்சியாளரை தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கிழே விழுந்தார். இதனால் அவரின் தொண்டை பகுதியை சிங்கம் கடித்து குதறியது.

தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக சிங்கத்துடன் போராடினார். அப்போது திடீரென்று ஒரு பெண் சர்க்கஸி இருந்து தீயனைப்பு பாதுகாப்பு உபகரணம் (தீ அணைப்பான்) கொண்டு கேஸ் ஸ்பீரே அடித்தார்.

இதைக் கண்டு பயந்த சிங்கம் உடனடியாக பயிற்சியாளரை விட்டு அங்கிருந்து ஓடியது. பெரிதும் பாதிப்புக்குள்ளான பயிற்சியாளர் Loberot உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தற்போது அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், இருந்த போதிலும் காயங்கள் பெரிய அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பயிற்சியாளர் Loberot-ஐ காப்பாற்றியது அவரது மனைவி தான் என்றும் இருவரும் ஒரே சர்க்கஸில் தான் பணிபுரிகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலு எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் சமார்த்தியமாக செயல்பட்டு தன் கணவனின் உயிரை அவர் காப்பாற்றியுள்ளார் என்று சமூகவலைத்தளங்களில் பலர் கூறி வருகின்றனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post