இணையத்தில் பழைய காரை விற்க புதிய டிரெண்டை உருவாக்கிய இஸ்ரேல்காரர் - வீடியோ!!

பொதுவாக காரை விற்க நினைத்தால் என்ன செய்வோம்? அதற்கான நிறுவனங்களை அனுகுவோம், நண்பர்கள் மூலம் விற்க முயல்வோம், அதிகபட்சம் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை உபயோகப்படுத்துவோம்.

இது நம்மில் பலரும் பயன்படுத்தும் யுக்தி. ஆனால் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் யூஜீன் ரோமென்வெஸ்கி. விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞராக உள்ளார். இவர் தனது பழைய காரை விற்க புதிய டிரெண்டையே உருவாக்கிவிட்டார்.


இவர் சுசிகி நிறுவனத்தின் எஸ்.யூ.வி மாடலாக விட்டாரா காரை கடந்த 1996ல் வாங்கியுள்ளார். 21 ஆண்டுகளுக்கு பிறகு தனது காரை விற்க நினைத்த அவர், எல்லோரையும் போல பழைய பாணியை பின்பற்றாமல், புதிய விளம்பர யுக்தியை பயன்படுத்தியுள்ளார்.

இதற்காக தனது காரை வைத்து 2 நிமிட டிரெய்லரை உருவாக்கினார். இணையதளங்களில் வைரலாக டிரெண்டிங்காக வரும் அந்த டிரெய்லர், பெரிய பெரிய கார் நிறுவனங்கள் கூட தங்களது கார்களை விற்க இப்படி ஒரு விளம்பரத்தை இதுவரை உருவாக்கவில்லை.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post