1000 எலி பிடிக்கும் கருவிகளுடன் ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர் - அதிர்ச்சி வீடியோ!


எலி பிடிக்கும் கருவிகளுடன் ஆபத்தான முயற்சியில் ஈடுபட்டு இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

’மவுஸ்டிராப்ஸ்’ எனப்படும் எலி பிடிக்கும் கருவிகளை நாம் ’டாம் அண்ட் ஜெர்ரி’ கார்டூன்களில் அதிகம் கண்டிருப்போம்.

அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அவை, நம் உடலில் பட்டுவிட்டால் அதீத வலியை ஏற்படுத்தக்கூடியவை. இந்நிலையில் கவின் ஃபிரி, டேனியல் க்ருச்சி ஆகியோர் இணைந்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.

ஒரு ரப்பர் மேடையின் மீது, 1000 எலி பிடிக்கும் கருவிகளை தனித்தனியாக அடுக்கி வைத்துள்ளனர். பின்னர் ஒரு ஏணியில் ஏறி, அதன் மீது ஒருவர் குதித்துள்ளார். மற்றொருவர் அதனை படம்பிடித்துள்ளார்.


அவ்வாறு குதிக்கும் போது, மேடை உள்ளிழுத்து பின் மேலெழும்பி விழும். அந்த சமயத்தில் எலி பிடிக்கும் கருவிகள் குதித்த நபரின் உடலில் பட்டு காயங்களை ஏற்படுத்துகின்றன.

அதற்கான மருத்துவ சிகிச்சையை அவர் உடனடியாக எடுத்துக் கொள்கிறார். பின்னர் அந்த வீடியோவை ஸ்லோ மோஷனில் எடிட் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

அது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் ஸ்லோ மோஷன் எஃபக்ட்களுக்கு யு-டியூப்பில் பெயர் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற ஆபத்தான செயல்பாடுகளை வீடுகளில் யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post