காப்பாற்றுங்கள் என கதறிய மகள்... சாகவிட்டு வேடிக்கை பார்த்த கொடூர தந்தை - அதிர்ச்சி வீடியோ!!

பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல் என்ற ஒரு பழமொழி இருக்கிறது.

இந்த சம்பவத்தை நீங்கள் அறிந்த பின், இந்த பழமொழி பொய்யே என்று தான் ஊர்ஜிதம் கொள்வீர்கள்.

சாய் ஸ்ரீ 13 வயது சிறுமி. பள்ளி செல்ல வேண்டும், கல்வி பயில வேண்டும் என கனவுகள் கொண்டிருந்த சாய் ஸ்ரீ, இப்போது உயிருடன் இல்லை.

பெற்றோர் விவாகரத்து பெற்ற ஒரே காரணத்தால் தனது உயரை இழந்துள்ளார் இந்த சிறுமி...

சாய் ஸ்ரீ!
இந்த சிறுமியின் பெயர் சாய் ஸ்ரீ. இவருக்கு எழும்பி மஜ்ஜையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கட்டாயம் சிகிச்சை எடுத்தே ஆகவேண்டும் என்ற நிலை.

அப்பாவிடம் உதவி!
இவரது அப்பா, இவருடனோ, இவரது அம்மாவுடனோ வாழ்ந்து வரவில்லை. ஆயினும், சாய் ஸ்ரீ தனது தந்தையிடம் தனது வாழ்க்கைக்காக உதவி நாடினார். ஏனெனில், இவரது அன்னையால் இவரை காக்க எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தார்.

 வீடியோவில் சாய் ஸ்ரீ கூறியவை...
"நான் சில மாதங்களாக பள்ளிக்கு செல்லவில்லை. நான் எனது நண்பர்களுடன் விளையாட வேண்டும்.எனது சிகிச்சை முடிந்துவிட்டால். நான் சந்தோசமாக பள்ளிக்கு செல்வேன். என் கைகளும், கால்களும் மிகவும் வலிக்கின்றன. அம்மாவிடம் உண்மையாகவே பணம் இல்லை. ஒருவேளை அம்மா உங்கள் பணத்தை எடுத்துக் கொள்வார் என நினைத்தால், நீங்களே என்னை மருத்துவமனைக்கு கூட்டி செல்லுங்கள்..." என எழுதப்படியே வீடியோவில் பேசியிருந்தார் சாய் ஸ்ரீ.

வாழ வேண்டும்!
நான் உயிர் வாழ விரும்புகிறேன். பொருட்களை விற்றாவது என்னை காப்பாற்றுங்கள் என சாய் ஸ்ரீ தன் வாழ்க்கைக்காக அவரது தந்தையிடம் கெஞ்சினார். ஆனால், அவரது தந்தை எதுவும் செய்யவில்லை.

இறந்துவிட்டார்!
எதிர்பாராத விதமாக சாய் ஸ்ரீ அந்த புற்றுநோய் தாக்கத்தால் மரணிக்க நேர்ந்தது. இவருடன் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற அவரது ஆசையும், கனவும் இறந்து போயின.

விவாகரத்து...
இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் போதுஆசையுடன் பெற்றுக் கொண்ட பிள்ளை தான் சாய் ஸ்ரீ. அவர்களுக்குள் சண்டை வந்து விவாகரத்து பெற்றதற்கு சாய் ஸ்ரீ ஏன் இறக்க வேண்டும். உறவுகள் மீதான பற்று தான் வரவர நாம் இழந்து வருகிறோம் என்றால், நமது உயிரில் இருந்து விளைந்த குழந்தைகள் மீதுமா பற்று இல்லாமல் போகும்.

கசப்பான வாழ்க்கை!
முக்கியமாக பெற்றோர்கள் விவாகரத்து பெற்ற பிறகு பல வகையில் பிள்ளைகளின் வாழ்க்கை திசைமாறி போகிறது. அதிலும், விவாகரத்து பெற்ற பிறகு மறுமணம் செய்துக் கொண்டவர்களின் பிள்ளைகள் வாழ்க்கை கசப்பின் உச்சமாகி போகிறது என்பது தான் உண்மை.

வீடியோ!
சாய் ஸ்ரீ தனது தந்தையிடம் உயிர் காக்க உதவி கேட்ட வீடியோ.
 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post