யாருமில்லாத பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து பியானோ வாசித்த கரடி - அதிர்ச்சி வீடியோ!!

அமெரிக்காவை சேர்ந்த் ஒருவர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார்.  தனது வீட்டின் சமையலறை குப்பையாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்து இந்த செயலில் ஈடுபட்டிருக்ககூடும் என போலீசில் புகார் கொடுத்தார்.

வீட்டுக்கு வந்து சோதனையிட்ட போலீசார், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை சோதனை செய்ததில், அந்த குற்றவாளி திருடன் கரடி என தெரியவந்துள்ளது.


வீட்டின் வெளி அறையில் ஜாலியாக உலாவிய கரடி அங்கு இருந்த பியானோவில் கையை வைத்து வாசித்துள்ளது, அதன் பின்னர் அங்கிருந்த சமையலறைக்கு சென்று, அவற்றையெல்லாம் சூறையாடியுள்ளது.

இவை அனைத்தும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்துள்ளது. சமையலறையில் உள்ள ஜன்னலானது அளவில் பெரியதாக இருந்ததால் அதன் வழியாக கரடி வந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.




Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post