திருடன்.. திருடன்' என கோஷமிட்ட இந்தியர்கள்... தலை தெறிக்க ஓடிய விஜய் மல்லையா - வீடியோ!!

இந்தியாவில் பல்வேறு வங்கி களில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருக்கும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதுதொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருக்கிறார்.

இதையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து அவரை கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆனால், இங்கிலாந்தில் விஜய் மல்லையா சாவகாசமாக தற்போது இந்திய அணி விளையாடும் போட்டிகளை ரசித்து வருகிறார்.


இதற்கு கடந்த முறை விமர்சனங்கள் எழுந்த போது தான் தொடர்ந்து இந்திய அணியை ஊக்கப்படுத்த இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளையும் காண செல்வேன் என்று தெரிவித்து இருந்தார். 

நேற்று, இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியை காண விஜய் மல்லையா லண்டன் ஓவல் மைதானம் வந்தார்.

விஜய் மல்லையாவை பார்த்ததும் இந்திய ரசிகர்கள், “திருடன் , திருடன்” என கோஷமிட்டனர்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post