திருமணத்தில் ஷார்ட்ஸ் அணிந்து நடனமாடிய 'புரட்சி' மணப்பெண் - வீடியோ!!

ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை, இந்தியாவில் திருமண வீடியோக்களைத் தயாரிப்பது ஒரு நீண்ட மற்றும் சுவாரஸ்யமற்ற ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது பாலிவுட் பாடல்களின் தாக்கத்தால் பல சுவாரஸ்யமான திருமண வீடியோக்களை தயாரித்து வருகின்றனர்.கடந்த பத்து வருடங்களில் பெண்கள் பலர் பணிபுரிய தொடங்கிவிட்டதால் அப்போதைய சூழல் தற்போது இல்லை.

வட இந்தியாவில் மணப்பெண் ஒருவர் தனது திருமண வீடியோவில் ஷார்ட்ஸ் அணிந்து நடனமாடிய வீடியோ ஒன்று யூ ட்யூபில் வேகமாக பகிரப்பட்டு 60 லட்சம்  பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இதை பற்றி கேட்டதற்கு மணமகன் மட்டுமே அனைத்து மகிழ்ச்சியையும் பெற வேண்டுமா என்ன? என கேள்வி எழுப்புகிறார் மணப்பெண் அமிஷா பாரத்வாஜ்,

அந்த வீடியோவில் அவர் ஷார்ட்ஸ் அணிந்து தனது தோழிகளுடன் ஆங்கிலப்பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடுகிறார்.

"இந்த வீடியோ ஏன் இந்தளவிற்கு பகிரப்பட்டது என எனக்கு ஆச்சரியமாக உள்ளது ; ஏனென்றால் அது மணப்பெண் ஒருவர் தனது மணநாளில் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற இயல்பான ஒரு நிகழ்வுதான்" என கூறுகிறார் அமிஷா.


ஆனால் பலர் அவர் அணிந்திருந்த ஆடை குறித்தும், அந்த பாடல் குறித்தும் பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மணப்பெண் அமிஷா பாரத்வாஜ் கூறியதாவது:-

"எனது வீடியோ, இந்திய மணமகள் என்றால் ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்; நடனமாடக் கூடாது, கண்டிப்பாக இந்த வீடியோவில் நான் அணிந்த மாதிரியான ஆடைகளை அணியக் கூடாது; என்பது போன்ற பழமைவாத சிந்தனைகளை தகர்த்தெறியும்”

"இந்திய மணப்பெண்கள் இம்மாதிரியாகத்தான் நடந்து கொள்ள வேண்டும் என பல நாட்களாக எழுதப்படாத சட்டம் ஒன்று உள்ளது; மணப்பெண் என்றால் வெட்கப்பட வேண்டும், அவ்வப்போது சிரிக்க வேண்டும், பெற்றோர்களை விட்டு போகும்போது அழ வேண்டும். ஆனால் தற்போது நவீன இந்திய மணப்பெண்கள் தாங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என தாங்களே தீர்மானிக்கின்றனர்" 

"இந்த வீடியோ வித்தியாசமாக வர வேண்டும் என நினைக்கவில்லை ஆனால் எனது ஆழ்மனதில் எனக்கு என்ன வேண்டுமோ அதை செய்வதற்கான துணிவு என்னிடம் இருந்தது" 

தன்னம்பிக்கை கொண்ட இளைய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பதால் என்னால் இவ்வாறு செய்ய முடிந்தது. மணமகன்கள் தங்களுக்கு வேண்டியதை செய்கிறார்கள், நடனமாடுகிறார்கள், குடிக்கிறார்கள், மணமகன்கள் தாங்கள் நினைத்தபடி மகிழ்ச்சியாக இருக்கும் போது மணப்பெண்கள் மட்டும் வெட்கப்பட்டு தலைகுனிந்து இருக்க வேண்டும் என எதிர்பார்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை.

காலத்திற்கு ஏற்ப மணமகள்களும் மாறிக் கொண்டு வருகிறார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

பலர் இந்த வீடியோவிற்கு நேர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளது மூலம் இந்த மாற்றத்தை பலர் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது; ஆனால் சிலர், இந்த வீடியோவில் இந்திய கலாசாரத்தை கெடுப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

"என்னை யாரும் கேலி செய்யவில்லை ஏனென்றால் என் பக்கம் பேச இணையத்தில் நிறைய பேர் இருந்தனர்" என அமிர்தா பாரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post