கோயிலில் பிச்சையெடுத்த காதல் பட நடிகருக்கு உதவிக்கரம் நீட்டிய வில்லன் நடிகர் - வீடியோ!!

எல்லாவற்றையும் இழந்து, யார் உதவியும் இன்றி கோவில் வாசலில் உணவுக்காக பிச்சையெடுக்கும் நிலை வரை சென்ற காதல் பட காமெடி நடிகர் பல்லு பாபுவிற்கு நடிகர் சாய் தீனா மற்றும் இயக்குனர் மோகன் ஆகியோர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

காதல் படத்தில் விருச்சககாந்த் என பெயர் வைத்துக்கொண்டு..  நடிச்சா  ஹீரோ சார்.. நான் வெய்ட் பன்றேன் சார். முதல்ல சினிமா. அப்புறம் அரசியல்.. அப்புறம் டெல்லி” என அவர் பேசிய வசனத்தை கேட்டு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. ஆனால், அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. 

 
இந்நிலையில், இவரின் பெற்றோர்களும் இறந்து போக, சென்னை எழும்பூருக்கு அருகிலிருக்கும் சூளை பகுதியில் ஒரு கோவிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இவரை பேட்டி எடுக்க வேண்டும் என விருப்பப்பட்டு, அவரை தேடி அலைந்த ஒரு பத்திரிக்கையாளர் மூலம் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.
 
இதையடுத்து, அவருக்கு உதவ நடிகர் சாய் தீனா மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் மோகன் ஆகியோர் முடிவெடுத்தனர். அதன்படி அவரை தேடிப்பிடித்து அழைத்து வந்து அவருக்கு தங்குவதற்கு இடத்தை ஏற்பாடு செய்துள்ள சாய் தீனா, சினிமாவில் அவர் அடுத்த இடத்திற்கு செல்ல உறுதுணையாக நாங்கள் இருப்போம் என கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர்கள் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post