விமானத்தில் குண்டாக இருந்த அழகியை கிண்டல் செய்த நபர்: தக்க பதிலடி கொடுத்த பெண் - வீடியோ!!

குண்டாக இருந்த காரணத்தினால் விமானத்தில் தன்னை கிண்டல் செய்த நபருக்கு அமெரிக்க மொடல் அழகி ஒருவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

நட்டாலி ஹேஜ் என்ற மொடல் அழகி புகைப்பட ஒளிப்பதிவிற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார்.

அப்போது விமானத்தில் இவரது அருகில் இருந்த நபர் ஒருவர் இவரது உடல் எடையை பார்த்து எள்ளி நகையாடியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் ஹேஜ் பகிர்ந்தார். அதன் பின்னர் பகிரப்பட்ட அந்த வீடியோ காட்சி மில்லியன் பார்வையாளர்களுக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.


கூடுதல் இடத்திற்காக 70 டொலர்கள் செலுத்தியுள்ளார். ஏனெனில் எனது காலை வைப்பதற்கு கூடுதல் இடம் தேவை என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் நடுவில் இருந்த இருக்கை மட்டுமே கிடைத்தது.

நான் இருக்கையில் அமர்ந்தவுடன், எனது இடப்பக்கம் அமர்ந்திருந்த நபர் குரலை உயர்த்தியும், பெருமூச்சு விட்டும், தனது இருக்கையில் அமர்ந்தபடியே தன்னை சரிசெய்து கொண்டார்.

இதன் பின்னர், அவருடைய நண்பருக்கு தன்னைப் பற்றி செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்ததை தான் கவனித்ததாகவும், ஹேஜ் கூறியுள்ளார்.

தனது வலது புறம் இருந்த பயணியிடம் தான் நடந்ததைக் கூறி, இருக்கையை மாற்றிக்கொள்ளுமாறு கோரியும், அவர் சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டார் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் மட்டுமல்ல உடல் பருமனாக இருப்பவர் தினசரி எதிர்கொள்ளும் யதார்த்த நிலை இதுதான்.

பேருந்தில் பயணிக்கும் போது, கடைகளில் வரிசையில் நிற்கும் போது, கச்சேரிகளில் கலந்து கொள்ளும் போது, இணையதளங்கள் உள்ளிட்ட இடங்களிலும் இது நடைபெறும். உங்களுக்கே உரிய இடத்தில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் நீங்கள் இருந்தாலும், மக்கள் உங்களை கேலி செய்து மனதை காயப்படுத்துவார்கள்.`

நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான், நீங்கள் உயிருடன் இருப்பதாலேயே எந்த தவறும் செய்யவில்லை என்பதை உணர்ந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இதன் பின்னர், குறிப்பிட்ட அந்த பயணியுடன் நேருக்கு நேர் சண்டையிட்ட அந்த பெண், அதை முகநூலில் வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார்.

குறிப்பிட்ட பதிவு ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களால் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த வீடியோவில், அந்த நபர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post