தரக்குறைவாக பேசும் நடிகை.. கதறி அழுத ஜுலியானா.. மீண்டும் சர்ச்சையாகும் பிக்பாஸ் - வீடியோ!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் ஜுலியானாவை தவிர மற்ற அனைவரும் திரையுலகை சேர்ந்தவர்கள்.

இதில் ஜுலியுடன் பழக ஆரம்பித்த பிறகு ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராமை தவிர மற்ற அனைவரும் அவருடன் சகஜமாக பழகி வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜுலியுடன் சமாதானம் ஆனார்கள்.

இந்நிலையில் நேற்று நடிகை ஆர்த்தியும், காயத்ரியும் ஜுலியை தரக்குறைவாக பேசி கதற வைத்த காட்சி வைரலாகியுள்ளது.அதில் நடிகை காயத்ரி ஜுலியை பார்த்து ரொம்ப நடிக்காதே, நீ ஒரிஜினலா இருந்தாதான் இங்க இருக்க முடியும். அதை நீ ஞாபகம் வைத்துக்கொள் என கண்டிக்கிறார்.

இதனால் ஜூலி வருத்தமடைந்து அழுது கொண்டிருக்கிறார். அவரை ஓவியா சமாதானம் செய்ததோடு, காயத்ரியிடம் சென்று, ஏன் ஜூலியிடம் இப்படி பேசுனீங்க என கேட்கிறார்.அதற்கு காயத்ரி வெளியேற்றம் வரும் போது அக்கா.. அக்கா என வந்து வழியறா.. வெளியேற்றம் முடிந்த பிறகு தெனாவட்டாய் சிரிக்கிறா என எரிச்சலோடு கூறுகிறார்.


மேலும் ஜூலி ஒரு மட்டமான ஜென்மம் என கூறுகிறார். இதற்கு ஆர்த்தியும் ஆதரவு தெரிவித்து பேசுகிறார். இது குறித்து ஜூலி கூறுகையில், நான் தப்பு செய்தால் பரவால்ல.. தப்பே செய்யாமல் என்னை ஏன் திட்டுகிறார்கள் என கூறி கதறி அழுகிறார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் சாயம் பூசப்படுகிறதோ என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஜுலி, ஆளும்கட்சியை சேர்ந்தவர்களை விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான ஆர்த்தியும், பாஜக கட்சியை சேர்ந்த காயத்ரி ரகுராமும் சேர்ந்து ஜுலி மீது வெறுப்பை கக்குவதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post