தங்கை மரணத்திற்கு காரணமான அண்ணன்... நடந்தது என்ன? அதிர்ச்சி வீடியோ...!

சீனாவில் விளையாட்டாக சிறுவன் செய்த செயல் ஒரு குழந்தையின் உயிரையே பறித்துள்ளது சம்பவம் மக்களை வேதனைக்குள்ளாகியுள்ளது. சீனாவில் சின்ஷ்சாவில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் கடந்த 3 ஆம் திகதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

லிப்ட் அருகில் தனது தங்கைகள்  2 பேருடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், அதன்பின் தன்னுடைய சிறிய தங்கையை பயமுறுத்துவதற்காக லிப்ட்டில் தனியாக விட்டுவிட்டு வெளியே சென்று விட்டான். 

இதனைத்தொடர்ந்து லிப்ட் தானியங்கி கதவு சாத்தியதால் பயத்தில் அழுத அந்த சிறுமி, நீண்ட நேரத்திற்கு பின் கதவு திறந்ததை தொடர்ந்து அழுதுக்கொண்டே வெளியே சென்று 18 ஆவது மாடியின் படிக்கட்டுகள் அருகே இருந்த ஜன்னல் வழியாக கீழே விழுந்து விட்டது. 

நீண்ட நேரம் குழந்தையை காணாமல் தவித்த குழந்தையின் பெற்றோர், உடல்கள் சிதறிய நிலையில் கீழே கிடந்த குழந்தையின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

குழந்தை எவ்வாறு இறந்தார் என்று சிசிடிவியின் காட்சிகளை சோதனை செய்த போது  தெரியவந்தது. தங்களின் மகன் விளையாட்டாக செய்த காரியம் மகளின் உயிரை பறித்து விட்டதை எண்ணி பெற்றோர் மிகவும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post