பிரித்தானியாவில் இளைஞர் செய்த கேவலமான செயல்... கதறி அழும் வீடியோ!!!

சமூகவலைதளம் மூலம் நட்பாக பழகி 12 வயது பெண்ணை உறவுக்கு அழைத்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் North Shields நகரை சேர்ந்தவர் Praju Prasad (24), இவருக்கு சமூகவலைதளம் மூலமாக 12 வயது சிறுமியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து சிறுமியுடன் நட்பாக பேசி வந்த Prasad North Shields மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் சிறுமி கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் என Prasad-க்கு தெரிந்திருக்கவில்லை.

இதனையடுத்து Prasad பற்றி குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளை தடுக்கும் குழுவின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி ரயில் நிலையத்துக்கு வந்த Prasad-ஐ அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். அப்போது, தன்னை விட்டுவிடும்படி Prasad கெஞ்சிய வீடியோவை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.


Prasad-க்கு £140 அபராதம் விதித்துள்ள நீதிமன்றம், பாலியல் குற்றவாளிகளின் பெயர் அடங்கிய பதிவில் ஐந்து ஆண்டுகளுக்கு கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது. மேலும் 9 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள், Prasad-க்கு கூறப்பட்டுள்ள தண்டனை விபரங்கள் திருப்தி அளிக்கவில்லை.

பயங்கரமான குற்றங்களை மீண்டும் செய்வதற்குள் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை தர வேண்டும் என கூறியுள்ளனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post