என் செல்லக் குழந்தை ஓவி... ரசிகர்கள் உருவாக்கிய ஓவியா கீதம் - வீடியோ!!

திரைப்படங்களை காட்டிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை ஓவியாவுக்கு அவரது ரசிகர்கள் ஓவியா கீதம் எனப்படும் பாட்டை உருவாக்கி விட்டனர்.

களவாணி, கலகலப்பு உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அவரது புறம்பேசாத பண்பு, நியாயம், அநியாயத்தை பிரித்து பார்க்கும் குணம், துணிச்சல், நேர்மை ஆகியவற்றால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஓவியாவுக்கும், ஜூலிக்கும் இடையேயான பிரச்சினை கலகம் செய்து ஜூலி மீதான கோபத்தை ஓவியா மீது திருப்பினார் ஜூலி.


ஆனால் சனிக்கிழமை நிகழ்ந்த நிகழ்ச்சியில் கமல் அந்த வீடியோவை போட்டபிறகு, ஓவியா மீது தவறில்லை என்பது வெட்டவெளிச்சமாக ரைசா மற்றும் ஆண் போட்டியாளர்கள் தெரிந்து கொண்டனர். ஜூலியை வெளுத்து வாங்கிய அந்த தருணத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஓவியாவுக்கு பெருகி வரும் ஆதரவால் அவருக்கு ஓவியா கீதம் என்ற பாடலை உருவாக்கி சமூக வலைதளங்களில் உலா விட்டுள்ளனர். என் செல்லக் குழந்தை ஓவி... என தொடங்கும் அந்த பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post