காவலரை தாக்கி.. சிறையிலிருந்து தப்ப முயன்ற கொலை குற்றவாளி - அதிர்ச்சி வீடியோ!!!

நியூ மெக்சிகோவின் ரியோ அர்ரிபா சிறையில் இருந்து 5 கொலை செய்த குற்றவாளி ஒருவர் சிறை காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூ மெக்சிகோவின் ரியோ அர்ரிபா சிறையில் 5 கொலை செய்த குற்றவாளி 21 வயதேயான Damian Herrera சிறை வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி காவலரை தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்ப முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இருப்பினும் தப்பிக்கும் முயற்சியில் அவர் வெற்றிபெறவில்லை என தெரிய வந்துள்ளது. முதலில் தமது அறையில் கழிவறை பெயர்ந்துள்ளதாக குறி காவலரை உள்ளே வரவழைத்து அறையில் வைத்து பூட்டியுள்ளார்.

அதன் பின்னரே அவர் அறையில் இருந்து வெளியேறி, எதிர்பட்ட காவலரை தலையில் தாக்கி விட்டு தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் உடனடியாக அங்கிருந்த காவலர்கள் சூழ்ந்து கொண்டு அவரை தப்பவிடாமல் தடுத்துள்ளனர்.

Herrera கட்ந்த யூன் 15 ஆம் திகதி தமது வளர்ப்பு தந்தை, சகோதரர் உள்ளிட்ட 5 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post