பேருந்து மீது பெண்ணை தள்ளிவிட்ட மர்ம நபர்: அதிர்ச்சி வீடியோ!!

பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவன் திடீரென பெண்ணை வேகமாக வரும் பேருந்திற்கு முன் தள்ளிவிட்ட வீடியோவை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

லண்டன் புட்னி பாலத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த வீடியோவில், பாலத்தின் நடைபாதையில் ஜாகிங் சென்றுக்கொண்டிருந்த நபர் ஒருவர், எதிரே நடந்து வந்த பெண்ணை திடீரென சாலையில் வேகமாக வந்துக்கொண்டிருக்கு பேருந்திற்கு முன் தள்ளிவிடுகிறார்.

பேருந்து ஓட்டுநரின் திறமையால் அதிர்ஷ்டவசமாக அந்த பெண் உயிர் தப்பியுள்ளார்.

15 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பாலம் வழியாக ஜாகிங் வந்த நபரிடம், பாதிக்கப்பட்ட 33 வயதான பெண் நடந்ததை பற்றிபேச முயன்றபோது, அவன் அதை கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து ஜாகிங் சென்றுள்ளான்.


பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிறிய காயங்களே ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், மர்ம நபரை அடையாளம் காண தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவத்தின் போது திறமையாக பேருந்தை இயக்கி பெண்ணின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநரை பொலிசார் பாராட்டியுள்ளளனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post