சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றிய குரங்கு: வைரலாகும் வீடியோ!!!!

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் திகதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 4-வது ஆண்டாக மூவர்ண கொடியை ஏற்றிவைத்தார்.

மாநில தலைநகரங்களில் நடந்த சுதந்திரதின விழாவில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் தேசிய கொடியை ஏற்றினார்கள். டெல்லியில் தேசிய கொடியை ஏற்றிவைத்து குண்டு துளைக்காத மேடையில் நின்றபடி நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளியில் சுதந்திர தின விழ கொண்டாட்டத்திற்காக கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதற்காக கொடி கம்பத்தில் கொடி கட்டி வைக்கப்பட்டிருந்தது. கொடி ஏற்ற சிறப்பு விருந்தினர் வருவதற்காக பள்ளி நிர்வாகம் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு குரங்கு கொடியை ஏற்றி விட்டு ஓட்டிவிட்டது.

இதை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post