நடிகை ஓவியாவின் 'ஓவியாவை விட்டா யாரு புதுப்பட ட்ரெய்லர்!!!

நடிகை ஓவியா கதாநாயகியாக நடிக்கும் 'ஓவியாவ விட்டா யாரு' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.

இந்தப் படத்தை ராஜதுரை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் தனது ஸ்ட்ரைட் ஃபார்வர்டு ஆட்டிட்யூடால் ரசிகர்களின் மனங்கவர்ந்தவராக மாறிய ஓவியா மன அழுத்தம் ஏற்பட்டு அங்கிருந்து வெளியேறினார்.

'பிக்பாஸ்' வீட்டில் இருக்கும்போதே ஓவியா ஆர்மி என அவரது ரசிகர்கள் எக்கச்சக்கமானோர் ஆதரவு தெரிவித்தனர்.

 பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் நடிகை ஓவியாவிற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.


இந்நிலையில், அவர் ஹீரோயினாக நடித்திருக்கும் 'ஓவியாவை விட்டா யாரு @ சீனி' என்கிற படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.

முன்பு சீனி எனும் பெயரில் எடுக்கப்பட்ட படத்தை ஓவியா ரசிகர்களை ஈர்ப்பதற்காக 'ஓவியாவ விட்டா யாரு' எனப் பெயர் மாற்றியுள்ளனர் எனத் தெரிகிறது.

 இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ் கஞ்சா கருப்பு, வையாபுரி ஆகியோரும் நடிக்கின்றனர்.

 நகைச்சுவை நடிகர் செந்தில், பவர்ஸ்டார், ராதாரவி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
சினேகன் இந்தப் படத்திற்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post