இவ்வளவு வெள்ளத்திலும் மீன் பிடித்து குதூகலமாக விளையாடிய மனிதர் - வைரலாகும் வீடியோ!!!

அமெரிக்காவில் அமெரிக்காவில் ஹார்வே புயலால் வீட்டுக்குள் புகுந்த வெள்ளத்தில் ஒருவர் மீன் பிடித்து விளையாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவை நேற்று முன் தினம் தாக்கிய ‘ஹார்வே’ புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல் காரணமாக டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன், விக்டோரியா, மற்றும் கார்பஸ் கிறிஸ்டி ஆகிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அதில் ஹூஸ்டன் நகரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பலத்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நிரம்பி வழிந்த தண்ணீர் நகரத்துக்குள் புகுந்தது. அதனால் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.


இந்நிலையில் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் பகுதியில் விவியானா சால்டனா என்பவரின் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்தது. வெள்ள நீரோடு மீன்களும் வீட்டிற்குள் புகுந்துள்ளன. அம்மீன்களை விவியானாவின் தந்தை பிடித்து விளையாடியுள்ளார். அவர் நீருக்குள் குதித்து மீன் பிடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

மீன் பிடிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post