சாக்கிலேட் பிரியரா நீங்கள்..? முதல்ல இத படிங்க - வைரலாகும் வீடியோ!!!!

அமெரிக்காவைச் சேர்ந்த ரேச்சல் வைல் என்ற பெண் தான் உண்ட சாக்லேட்டில் புழுக்கள் இருந்ததாக பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். மேலும் அது குறித்த வீடியோவையும் பதிவு செய்திருந்தார்.

அந்த வீடியோவில் அவர் பிரிக்கும் ஒவ்வொரு சாக்லேட்டிலும் புழுக்கள் இருந்தன. மேலும் அவர் இந்த சாக்லேட்டை யாரும் வாங்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோவை பலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதனை பார்த்த சாக்லேட் விரும்பிகள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் அந்த சாக்லேட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக ரேச்சல் கூறியிருந்தார்.


அவர் 'எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் சாக்லேட் சுகாதாரமானது. அது குறிப்பிட்ட சூழ்நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்.

சரியான முறையில் பாதுகாக்கப்படாததே இதற்கு காரணம். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியதாக ரேச்சல் தெரிவித்தார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post