ரயிலின் ஜன்னலில் பயணம் செய்தும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணி - வைரலான வீடியோ!!!

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரான பெர்த்தில் கடந்த சனிக்கிழமை வாலிபர் ஒருவர் வேகமாக செல்லும் ரெயிலின் பின்புறத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியில் ஓட்டிக் கொண்டு பயணம் செய்தார். 110 கி.மீ. வேகத்தில் சென்ற ரெயிலின் வெளியே, வைபரை பிடித்தபடி நின்றுகொண்டு பயணம் செய்தும் அந்த வாலிபருக்கு ஒன்றும் ஆகவில்லை. 

அந்த மர்ம நபர் அவ்வாறு பயணம் செய்வதை பார்த்த தொழிலாளர்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து அடுத்த ரெயில் நிலையத்தில் அவரை போலீசார் அவரை பிடித்தனர். 


இதுகுறித்து நடத்திய விசாரணையில் அவர் மனநலம் சரியில்லாதவர் என்பது தெரிய வந்தது. அவரை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ரெயிலின் வெளியே பயணம் செய்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post