பாக்கெட்டில் வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்... வைரலாகும் வீடியோ...!

இந்தோனேஷியாவில் வாடிக்கையாளர் ஒருவரின் பாக்கெட்டில் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறிய சம்பவத்தின் சி.சி.டி.வி. வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்தோனேஷியாவில் தனியார் விடுதியில் பணியாற்றி வரும் யுலியான்டோ என்பவரின் ஸ்மார்ட்போன் தனது பாக்கெட்டில் வைத்திருந்த போது வெடித்து சிதறியுள்ளது.

ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி நோட் 7 வெடித்ததால் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், இம்முறை கேலக்ஸி கிரான்ட் டுயோஸ் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியுள்ளது. 

47-வயதான யுலியான்டோ தான் பணியாற்றி வந்த விடுதியில் காத்திருந்தார். திடீரென தனது பாக்கெட் சூடாவதை உணர்ந்து, அதில் இருந்த ஸ்மார்ட்போனை எடுக்க முயன்றார்.

அப்போது அவரது சாம்சங் ஸ்மார்ட்போன் வெடித்து சட்டையில் தீப்பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து யுலியான்டோ உடனடியாக தனது சட்டையை கழற்றிவிட்டார்.

செப்டம்பர் 30-ம் தேதி அரங்கேறிய இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட விடுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

யுலியான்டோ பாக்கெட்டில் வெடித்த சாம்சங் கிராண்ட் டுயோஸ் 2013-ம் ஆண்டு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

அதிகப்படியான வைபை, ப்ளூத் மற்றும் ஜிபிஎஸ் பயன்பாடு தான் சாம்சங் ஸ்மார்ட்போன் வெடிக்க காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

எனினும் இச்சம்பவம் குறித்து இந்தோனேஷிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர் பாதுகாப்பே எங்களது முக்கிய குறிக்கோள், வாடிக்கையாளருக்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்குவோம் என சாம்சங் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் வெளியிட்ட கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் உலகின் பல பகுதிகளிலும் வெடித்து சிதறியதை தொடர்ந்து, விற்பனை நிறுத்தப்பட்டு அனைத்து நோட் 7 சாதனங்களும் திரும்ப பெறப்பட்டன, கேலக்ஸி நோட் 7 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் பிழையான பேட்டரியாலேயே வெடித்து சிதறியது. யுலியான்டோ பாக்கெட்டில் ஸ்மார்ட்போன் வெடித்த வீடியோவை காணலாம்..,

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post