கல்லூரியில் நடனமாடிய ஜூலியை கதற வைத்த கல்லூரி மாணவர்கள்... வீடியோ...!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி ஆரம்பத்தில் தமிழக மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். பொதுமக்களில் ஒருவராய் இருந்து இந்த வாய்ப்பு கிடைத்த ஜூலியை ஆரம்பத்தில் மக்கள் பாராட்டி வந்தனர்.

அதன் பின்பு அவருடைய பேச்சு, நடவடிக்கை, மற்றும் சில செய்கைகளால் மக்களிடம் இருந்து பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார்.

மேலும் ஓவியாவை தொடர்ந்து ஜூலி காயத்ரி தலைமையில் அவரை முரண்பட்டே பேசிவந்தார். இதனால் ஓவியாவுக்கு ரசிகர்கள் ஆதரவு பெருகியது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் ஓவியாவுக்கு ரசிகர்கள் ஆதரவு தந்து வருகிறார்கள். இந்நிலையில் ஜூலி சமீபத்தில் ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமும் ஆடியுள்ளார்.

நிகழ்ச்சி முடிவில் அவர் பேசும்பொழுது அரங்கில் இருந்த மாணவர்கள் ஓவியா ஓவியா என்று கோஷமிட்டனர். இதனால் பேசுவதை நிறுத்திய ஜூலி சிறிது நேரத்திற்கு அமைதியானார்.

ஆனாலும் மாணவர்கள் தொடர்ந்து கத்திகொண்டே இருந்தனர். கடைசியில் நிகழ்ச்சிற்கு நன்றி கூறி விடைபெற்றார். அந்த வீடியோவை கீழே இணைத்துள்ளோம்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post