ஜப்பான் மீன் சந்தையில் விற்கப்பட்ட ஒரு மீனின் விலை எவ்வளவு தெரியுமா..? - அதிர்ச்சி வீடியோ...!


புளுபின் டூனா எனப்படும் மீன்வகை ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள துஸ்கிஜி மீன் சந்தையிலே 74.2 மில்லியன் யென்களுக்கு விற்கப்பட்டுள்ளது. 

டோக்கியோ நகரில் அமைந்துள்ள சுசீ சென்மாய் உணவகத்தின் உரிமையாளரான கியோசி கிம்பூரா என்பவரே குறித்த ஒரு மீனை இலங்கை பெறுமதி படி 9.6 கோடிகளுக்கு வாங்கி அணைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார். 

உலகில் மிகவும் பெரிய மீன் சந்தையாக கருதப்படுவது ஜப்பானின் துஸ்கிஜி மீன் சந்தையாகும். குறித்த சந்தையானது தனது இருப்பிடத்தை மாற்றுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், தமது பழைய இடத்திலேயே புதுவருடத்திற்கான விற்பனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

குறித்த விற்பனையின் போது ஒரு மீனை அதிக விலைக்கு வாங்கி சுசீ சென் உணவகத்திற்கு கொண்டு சென்ற கியோசி கிம்பூரா தனது சமையல் நிபுனர்களை கொண்டு மீனை வெட்டி பகிர்வதற்கு தயாராகிய நிலையில், குறித்த மீனின் பாகங்களை சுவைப்பதற்கு நூற்றுக்கணக்கானோர் வரிசையில் காத்திருந்துள்ளனர்.இதற்கு முதல் கடந்த 2013 ஆம் ஆண்டு சுமார் 155 மில்லியன் யென்கள் கொடுத்து மீன்களை இவர் வாங்கியிருந்தார். தற்போது இவர் வாங்கியுள்ள மீனின் ஒரு துண்டு பகுதியின் விலை சுமார் 10,000 யென்களுக்கு விற்பனையாகின்றதாம்.

ஜப்பானின் ‘டூனா கிங்’ என அழக்கப்படும் கியோசி கிம்பூரா புது வருட மீன் கொள்வனவில் தொடர்ந்து 6 வருடங்கள் அதிக விலைகொடுத்து ஆண்டின் மீன் வியாபாரத்தை ஆரம்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post